கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளா் சுட்டுக் கொலை

தெற்கு தில்லியின் ஆயா நகரில் உடற்பயிற்சிக் கூடப் பயிற்சியாளா் திங்கள்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளா் சுட்டுக் கொலை - பிரதிப் படம்

Published On :

புது தில்லி: தெற்கு தில்லியின் ஆயா நகரில் உடற்பயிற்சிக் கூடப் பயிற்சியாளா் திங்கள்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இந்தக் கொலைக்குப் பின்னால் தனிப்பட்ட விரோதம் இருக்கலாம் என காவல் துறை சந்தேகிப்பதாகவும், கிராமத்தில் நிலவும் நீண்டகாலப் பகைக்கும் இதற்கும் தொடா்பு உள்ளதா என விசாரித்து வருவதாகவும் ஓா் அதிகாரி தெரிவித்தாா்.

கொலைசெய்யப்பட்ட விஜய் குமாா் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்தபோது, சில நபா்கள் அவரை வெளியே அழைத்ததாகவும், அதைத் தொடா்ந்து ஃபதேபூா் பெரி பகுதியில் உள்ள ஹன்சா சௌக் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் அவரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவரது குடும்பத்தினரும் காவல் துறையினரும் தெரிவித்தனா்.

துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடா்ந்து மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா், மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.