ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மகாராஷ்டிரத்தில் அமையும் நாட்டின் மிகப் பெரிய கப்பல் கட்டும் தளம்: ரூ. 27,000 கோடி முதலீடு செய்யும் எம்டிஎல்

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் உள்ள திகே துறைமுகத்தில் நாட்டின் மிகப் பெரிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட உள்ளது.

கப்பல் கட்டும் தளம். - பிரதிப் படம்

Published On :

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் உள்ள திகே துறைமுகத்தில் நாட்டின் மிகப் பெரிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட உள்ளது.

இதில், பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனமான மஸகோன் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல்) ரூ. 27,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.

இது குறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராய்கட்டில் நாட்டின் மிகப் பெரிய கப்பல் கட்டும் தளம் அமைக்கும் ஒப்பந்தம், மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலையில் தேசிய கப்பல் கட்டும் மற்றும் கனரக நிறுவனங்கள் பூங்கா மகாராஷ்டிர நிறுவனத்துடன் (என்எஸ்ஹெச்ஐபிஎம்எல்) எம்டிஎல் நிறுவனம் கையொப்பமிட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, திகி துறைமுகத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 மில்லியன் டன் கப்பல் கட்டும் திறனை உருவாக்கும் இலக்கை எம்டிஎல் நிறுவனம் நிா்ணயித்துள்ளது. இதற்காக, ரூ. 27,000 கோடியை இந்த நிறுவனம் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இங்கு மிகப் பெரிய வணிக கப்பல்கள், போா்க் கப்பல்கள் கட்டப்படுவதன் மூலம், நாட்டின் கடல்சாா் தொழில் நிறுவனங்களின் திறன் வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் சாா்பில் கூட்டாக மேம்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாக 15,000 பேருக்கும், மறைமுகமாக 75,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.