மும்பையில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சொகுசு கார் விபத்து: 3 பேர் பலி
மும்பையில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது பற்றி....

விபத்துக்குள்ளான கார்.
மும்பையில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், கடற்கரைச் சாலையில் இருந்து ஹாஜி அலி நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதிவேகத்தில் வந்த அந்த கார் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி, கீழே பாய்ந்து விழுந்தது.
காரில் இருந்த நான்கு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களில் மூன்று பேர் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக தெரிவித்தனர். மேலும் காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விபத்தில் பிஎம்டபிள்யூ காரும் கடுமையாகச் சேதமடைந்தது. அந்த கார் பாலத்தில் தொங்கிக்கொண்டிருந்த விளம்பரப் பலகையைக் கிழித்துக் கொண்டு கீழே விழுந்துள்ளது. விபத்து தொடர்பான விடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Three people were killed, and another suffered critical injuries after a speeding BMW crashed on Mumbai's Coastal Road and fell off a bridge in the early hours of Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








