
மும்பையில் சாமி தரிசனம் செய்த சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் மும்பையில் சாமி தரிசனம் செய்தது குறித்து...
சூர்யகுமார் யாதவ். - படம் - பிடிஐ
மும்பையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் புதன்கிழமை (செப். 16) சாமி தரிசனம் செய்தார்.
மும்பையில் சிறப்பு வாய்ந்த லால்பாக்சா ராஜா கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் சாமி தரிசனம் செய்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சூர்யகுமார் பேசியதாவது:
இந்தத் தருணம் நன்றாக உள்ளது. கடந்த 5, 6 ஆண்டுகளாக நான் இங்கு வந்து கொண்டிருக்கிறேன். மக்கள் இங்கு வந்து கடவுளை வணங்குகின்றனர். 2024 ஆம் ஆண்டுக்கான உலக் கோப்பையை இந்தியா வெற்றி பெறும் என்று யாரோ ஒருவர் எழுதி வைத்த குறிப்புகள் அடங்கிய படத்தை நான் இங்கு 2024 இல் வந்தபோது பார்த்தேன்.
அதன்பிறகு, 2025 ஆம் ஆண்டு நான் வந்தபோது, நமது தலைமையில், 2026 இல் இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் என்று யாரோ எழுதியிருந்தார்கள். ஆகையால், இங்கு வேண்டப்படும் விருப்பங்கள் சக்தி வாய்ந்தவை.
கடந்தாண்டு, எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம். அதன்படியே எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனவே, எல்லாவற்றிற்கும் நன்றி சொல்வதற்கும், ஆசீர்வாதங்களை பெறுவதற்கும் இன்று நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
கடினமாக உழைப்பது மட்டுமே நம் கையில் உள்ளது. நான் தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறேன், கடவுள் எதைக் கொடுத்தாலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடவுளின் ஆசி பெறுவதற்காக என் தாய், தந்தை மற்றும் மனைவியுடன் இங்கு வந்தேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
Summary
Indian cricketer Suryakumar Yadav offered prayers in Mumbai on Wednesday (Sept. 16).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







