தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தில்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி...

Multiple Delhi schools receive bomb threats, anti-sabotage checks underway

தில்லியில் போலீஸார்.

Published On :

தில்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய தில்லியிலுள்ள நான்கு பள்ளிகள் உட்பட ஆறு பள்ளிகளுக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து, போலீஸார் மற்றும் இதர அதிகாரிகள் பள்ளிகளைக் காலி செய்து, தீவிர சோதனையில் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு இந்த மிரட்டல்கள் குறித்து மூன்று அழைப்புகள் வந்ததாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் படைகள், மோப்ப நாய் படைகள் மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் பல காவல் குழுக்கள் பள்ளிகளுக்கு விரைந்தன என்றார்.

பின்னர் பள்ளிகளிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனைகள் நடைபெற்றன. இதுவரை சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை.

இது ஒரு போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலாக இருக்கக்கூடும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Summary

At least six schools in Delhi, including four schools in central Delhi, received bomb threat emails on Monday morning. Following the threats, police and other authorities started evacuation and anti-sabotage checks, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.