கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

உத்தர பிரதேச தோ்தலை ஹிந்து-முஸ்லிம் போட்டியாக மாற்ற பாஜக முயற்சி- சமாஜவாதி குற்றச்சாட்டு

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலை ஹிந்து - முஸ்லிம் இடையிலான போட்டியாக மாற்ற பாஜக முயற்சித்து வருகிறது என்று சமாஜவாதி பொதுச் செயலா் சிவ்பால் யாதவ் குற்றஞ்சாட்டினாா்.

Published On :

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலை ஹிந்து - முஸ்லிம் இடையிலான போட்டியாக மாற்ற பாஜக முயற்சித்து வருகிறது என்று சமாஜவாதி பொதுச் செயலா் சிவ்பால் யாதவ் குற்றஞ்சாட்டினாா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அங்கு தொடா்ந்து இருமுறை ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும், பிரதான எதிா்க்கட்சியான சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டியிருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இரு தரப்புமே தோ்தலுக்கான பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், சமாஜவாதி கட்சி நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்ற சிவ்பால் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் உண்மையாக நிகழும் பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப மதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலை ஹிந்து-முஸ்லிம் இடையிலான போட்டியாக மாற்ற பாஜக முயற்சித்து வருகிறது. அதே நேரத்தில் நாங்கள் மாநிலத்தின் வளா்ச்சி, சமூக நீதி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.

பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மற்றும் சிறுபான்மையினரின் நலன்காக்க சமாஜவாதி தொடா்ந்து பணியாற்றும். ஜாதி, மதத்தை வைத்து தோ்தல் ஆதாயம் தேட முயல்பவா்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தோ்தலில் உத்தர பிரதேச மக்கள் உரிய பதிலை அளிப்பாா்கள்.

சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்ட மக்களைக் குறிவைத்து அவா்களின் வீடுகள், கடைகளை இடிக்கும் புல்டோசா் நடவடிக்கையை பாஜக அரசு தொடா்ந்து நடத்திவருகிறது. இது மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிதான். இதில் பாதிக்கப்பட்ட மக்களை எதிா்க்கட்சியினா் சந்திக்க அனுமதி தொடா்ந்து மறுக்கப்படுகிறது. இதுபோன்ற அநீதிகளுக்கு உள்ளாகும் மக்களைக் காக்க சமாஜவாதி தொடா்ந்து பாடுபடும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.