பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

சிக்கிம் மாநில பாஜக பொறுப்பாளராக ராஜு பிஸ்டா நியமனம்!

சிக்கிம் மாநில பாஜக பொறுப்பாளர் நியமனம் பற்றி..

BJP Sikkim in-charge

சிக்கிம் மாநில பாஜக பொறுப்பாளர் நியமனம் - X

Published On :

பாஜக கட்சியின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, டார்ஜிலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜு பிஸ்டா சிக்கிம் மாநில பாஜக பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்தது.

இதுதொடர்பா பாஜக சிக்கிம் ஊடகப் பிரிவு,

ராஜு பிஸ்டாவின் அவரது அமைப்பு ரீதியான அனுபவம், இளம் வயதுக்கே உரிய ஆற்றல் மற்றும் பொதுச் சேவையின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை கட்சியை மேலும் வலுப்படுத்தும்.

சிக்கிம் மாநில பாஜக தலைவர் டி.ஆர். தாபா, ராஜு பிஸ்டாவின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட அமைப்பு ரீதியான ஆற்றலுடன் அவரது வழிகாட்டுதலின் கீழ் பணியாற்ற மாநிலப் பிரிவு ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

சிக்கிமில் தனது அமைப்பையும், அடிமட்ட அளவிலான செல்வாக்கையும் வலுப்படுத்த பாஜக முயன்று வரும் சூழலில் ராஜு பிஸ்டாவின் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக அவர் வழங்கிய அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்திற்காக அப்பொறுப்பிலிருந்து விலகும் திலீப் ஜெய்ஸ்வாலுக்கும் மாநிலப் பிரிவு நன்றி தெரிவித்தது. அவரது பதவிக்காலம் கட்சியை வலுப்படுத்துவதிலும், கட்சித் தொண்டர்களை ஊக்குவிப்பதிலும், மாநிலம் முழுவதும் கட்சியின் இருப்பை விரிவுபடுத்துவதிலும் பங்காற்றியதாகக் குறிப்பிடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன்ஆகியோரின் தலைமையின் கீழ் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று சிக்கிம் மாநில பாஜக பிரிவு தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.