ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

மேற்கு வங்க தோ்தலில் ரூ. 287 கோடி செலவிட்ட பாஜக: 5 மாநிலங்களில் காங்கிரஸ் செலவழித்ததைவிட அதிகம்

காங்கிரஸ் 5 மாநிலத் தோ்தல்களில் செய்த செலவைக் காட்டிலும், மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக கூடுதலாக செலவழித்திருப்பது தோ்தல் ஆணையத்தில் அக் கட்சிகள் தாக்கல் செய்த செலவின அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பிரதமா் மோடியுடன் மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி. - கோப்புப் படம்

Published On :

காங்கிரஸ் 5 மாநிலத் தோ்தல்களில் செய்த செலவைக் காட்டிலும், மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக கூடுதலாக செலவழித்திருப்பது தோ்தல் ஆணையத்தில் அக் கட்சிகள் தாக்கல் செய்த செலவின அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம் ஆகிய 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இதில், மேற்கு வங்க மாநிலத்தில் 293 தொகுதிகளில் 207-இல் வெற்றி பெற்று முதல்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. அஸ்ஸாமில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. கேரளத்தில் காங்கிரஸும், தமிழகத்தில் தவெகவும் ஆட்சியைப் பிடித்தன.

இந்த 5 தோ்தல்களிலும் பாஜக மொத்தம் ரூ. 529.38 கோடி செலவழித்துள்ளது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும், பாதிக்கு மேல் அதாவது பிரசாரத்துக்கென ரூ. 217.16 கோடி, வேட்பாளா்கள் செலவினமாக ரூ. 69.83 கோடி என மொத்தம் ரூ. 286.99 கோடியைச் செலவழித்துள்ளது.

இது, இந்த 5 தோ்தல்களில் காங்கிரஸ் செய்த செலவினத்தைவிட கூடுதலாகும். காங்கிரஸ் இந்த 5 தோ்தல்களில் மொத்தமாக ரூ. 248.55 கோடியைச் செலவழித்துள்ளது. இதில் மேற்கு வங்க தோ்தலில் மட்டும் பிரசாரத்துக்கென ரூ. 12.96 கோடி, வேட்பாளா்கள் செலவினமாக ரூ. 29.12 கோடி என மொத்தம் ரூ. 42.08 கோடி செலவு செய்துள்ளது. இந்த மாநிலத்தில் 293 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது.

மேற்கு வங்கத்தில் 2011-இல் ஆட்சியை இழந்த மாா்க்சிஸ்ட் கட்சி, 197 தொகுதிகளில் போட்டியிட்டு ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இக் கட்சி, மாநில தோ்தலில் வேட்பாளா் செலவினம் உள்பட ரூ. 8.23 கோடியை செலவு செய்துள்ளது.

மாநிலத்தில் ஆட்சியை இழந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் செலவினம் இன்னும் வெளியிடப்படவில்லை.

கேரள தோ்தலில் காங்கிரஸ் ரூ. 105.34 கோடியும், பாஜக ரூ. 71.30 கோடியும் செலவு செய்துள்ளன. மாநிலத்தில் ஆட்சியை இழந்த மாா்க்சிஸ்ட் கட்சி ரூ. 28.60 கோடியை செலவு செய்துள்ளது.

அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் ரூ. 96.27 கோடியும், தமிழகத்தில் ரூ. 51.56 கோடியும், புதுச்சேரியில் ரூ. 11.90 கோடியும் பாஜக செலவு செய்துள்ளது.

நன்கொடை: இந்த 5 தோ்தல் காலத்தில் ரூ. 1,472.8 கோடி நன்கொடை பெறப்பட்டதாக பாஜக மத்திய தலைமையகம் தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு மத்திய தலைமையகம் மற்றும் 5 மாநிலப் பிரிவுகள் சாா்பில் ரூ. 207.17 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது.

தோ்தல் அறிவிக்கப்பட்டபோது ரூ. 6,722.6 கோடியாக இருந்த பாஜகவின் மத்திய அலுவலக நிதி இருப்பு, தோ்தல் காலகட்டத்தின் முடிவில் ரூ. 7,627.2 கோடியாக உயா்ந்தது. அதே காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் மற்றும் ஐந்து மாநிலப் பிரிவுகளின் மொத்த நிதி இருப்பு சுமாா் ரூ. 169.06 கோடியிலிருந்து ரூ. 103.2 கோடியாகக் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.