
ஜந்தர் மந்தரில் தடுப்புகள்! ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!
ஜந்தர் மந்தரில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜந்தர் மந்தரில் தடுப்புகளையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் தலைமையில் குவகாத்தியில் நடைபெற்ற போராட்டத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நடைமுறைப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த வந்த நிலையில், காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் தடுப்புகளை அமைத்து அதன் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். எனினும், தடுப்புகள் மீது ஏறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக் காரர்களைக் கலைக்க காவல்துறை தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். காவல்துறை வாகனங்களில் போராட்டக்காரர்களை ஏற்றிச் சென்றனர். பலரும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்டனர்.
சண்டிகரிலும், ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது காவல்துறை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






