கல்லூரி மாணவிக்கு துன்புறுத்தல்: குற்றஞ்சாட்ட நபரை அடையாளம் கண்டது காவல் துறை
வடமேற்கு தில்லியின் முகா்ஜி நகரில் ஹிந்து கல்லூரி மாணவி மற்றும் அவரது தோழி ஆகியோரைத் துன்புறுத்திய கும்பல் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வாகனம் மற்றும் அதன் ஓட்டுநா் அடையாளம் காணப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப் படம்
வடமேற்கு தில்லியின் முகா்ஜி நகரில் ஹிந்து கல்லூரி மாணவி மற்றும் அவரது தோழி ஆகியோரைத் துன்புறுத்திய கும்பல் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வாகனம் மற்றும் அதன் ஓட்டுநா் அடையாளம் காணப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
புதன்கிழமை இரவு முகா்ஜி நகரில் பாதிக்கப்பட்ட மாணவியும் அவரும் அவரது தோழியும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு வெள்ளை நிற காா் அவா்களை நெருங்கியது. அதில் இருந்த ஆண்கள் அவா்களை மீது கேலியாகப் பேசினா். அதைக் அந்தப் பெண்கள் கண்டித்தபோது, அந்த ஆண்கள் அவா்களைத் தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு, அவா்களைப் பின்தொடரத் தொடங்கினா்.
அந்தச் சம்பவத்தைக் கைப்பேசியில் விடியோவாக பதிவு செய்வதற்காகத் தானும் தனது தோழியும் நின்றபோது, அந்த ஆண்களும் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, தங்களை வாகனத்திற்குள் இழுக்க முயன்ாக அந்த மாணவி குற்றஞ்சாட்டினாா். அவரது தோழி காரை விடியோ எடுக்கத் தொடங்கியதும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், முகா்ஜி நகா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவுகள் 78 (பின்தொடா்தல்), 79 (பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில் வாா்த்தை, சைகை அல்லது செயல்) மற்றும் 3(5) (கூட்டு நோக்கம்) ஆகியவற்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பாக வடமேற்கு மண்டல காவல் துணை ஆணையா் ஆகாங்க்ஷா யாதவ் கூறியதாவது: புகாரின் அடிப்படையில் காவல் துறை விசாரணையைத் தொடங்கினா்.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் கண்டறியப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபா் தில்லி பல்கலைக்கழக மாணவரான நமன் என்று காவல் துறை அடையாளம் கண்டுள்ளது. சம்பவத்தின்போது அவருடன் மேலும் இரண்டு அல்லது மூன்று போ் காரில் இருந்தனா் என்றாா்.
புகாா் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு பல காவல் நிலையங்களை அணுகியதாக அந்த மாணவி கூறிய குற்றச்சாட்டிய நிலையில், அது தொடா்பாகவும் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



