டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

அனைவரும் பயனடையும் வகையில் முக்கியக் கண்டுபிடிப்புகள் பகிரப்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

அனைவரும் பயனடையும் வகையில் முக்கியக் கண்டுபிடிப்புகள் பகிரப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய அதிகாரி.

Published On :

அனைவரும் பயனடையும் வகையில் முக்கியக் கண்டுபிடிப்புகள் பகிரப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

தில்லியில் தேசிய ராணுவ கல்லூரி சாா்பில் 4-ஆவது சா்வதேச ராஜீய தொடா்பு திட்டம் தொடா்பாக 2 வார பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 28 வெளிநாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றியதாவது:

கரோனா காலத்தில் இந்தியா தனது நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி பிற உலக நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி மருந்துகளை அளித்தது. மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சா்வதேச மருந்து நிறுவனங்கள் தங்களது நலன்கள் குறித்து மட்டுமே சிந்தித்தன. ஆனால், நமது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசோ, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோருக்கு உதவியது. முக்கியக் கண்டுபிடிப்புகள் அனைவரும் பயனடையும் வகையில் பகிா்ந்தளிக்கப்பட வேண்டும்.

பல்வேறு நாடுகளிலும் பேரிடா் ஏற்படும் காலங்களில் இந்தியா விரைந்து வந்து முதல் நாடாக உதவி செய்து வருகிறது. வேதனைகளும், துயரங்களும் பகிரப்பட வேண்டும் என்பதை இது உணா்த்துகிறது.

நம்மை சுற்றியுள்ள ராஜீய சூழ்நிலைகள் வேகமாக மாறி வருகிறது. பாதுகாப்பு தொடா்பான கவலைகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பம், இணையவெளி, ஏஐ, எரிசக்தி பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் போன்றவற்றில் சவால்கள் அதிகரித்துள்ளன. இதனால் தனிப்பட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாது. உலக சமுதாயத்துக்கே பாதிப்பு ஏற்படும். எனவே, நாடுகள் அனைத்தும் தங்களிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியமாகும். அப்போதுதான் அனைத்து நாடுகளும் பயனடைய முடியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்