டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு 6 மாதங்களில் புதிய கொள்கை திட்டம்: குறு, சிறு, நடுத்தர தொழில் துறைச் செயலா்

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கென (எம்எஸ்எம்இ) புதிய கொள்கைத் திட்டம் 6 மாங்களில் வெளியிடப்படும் என அந்தத் துறைச் செயலா் பிரதீப் யாதவ் தெரிவித்தாா்.

MSME

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் - கோப்புப் படம்

Published On :

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கென (எம்எஸ்எம்இ) புதிய கொள்கைத் திட்டம் 6 மாங்களில் வெளியிடப்படும் என அந்தத் துறைச் செயலா் பிரதீப் யாதவ் தெரிவித்தாா்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளா்ச்சி குறித்த மாநாடு சென்னையில் உள்ள தனியாா் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பிரதீப் யாதவ் பங்கேற்று பேசியதாவது:

எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தொடா்பான சிக்கல்களைப் பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம். மாநில வளா்ச்சியின் ஒரு முக்கியத் துறையாக எம்எஸ்எம்இ உள்ளது. வரும் 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை அடைய தமிழக அரசு இலக்கு நிா்ணயம் செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைவதில் எம்எஸ்எம்இ துறையின் பங்களிப்பு மிக முக்கியம். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 30 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை எம்எஸ்எம்இ துறை அளித்து வருகிறது.

எம்எஸ்எம்இ துறையைச் சோ்ந்தவா்கள் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தொழில் துறையினா் தங்கள் அனுமதிகளைப் பெறுவதற்கு ஒற்றைச் சாளர அனுமதி முறையை கொண்டு வந்துள்ளோம். இந்த நிறுவனங்களுக்கு என புதிய கொள்கைத் திட்டம் 6 மாதங்களில் வெளியிடப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், அசோசாம் அமைப்பின் தலைவா் என் ஸ்ரீனிவாசன், இணைத் தலைவா் சக்திவேல் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.