டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி பேரணி: பல இடங்களில் காங்கிரஸாா் கைது: போலீஸாருடன் மோதல்

எஸ்ஐஆா் விவகாரத்தில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்குவதுடன், அவரைக் கைது செய்யவும் வலியுறுத்தி, மாநில தலைநகரங்களில் உள்ள தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகங்களை நோக்கி காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.

என்ஜ்ஹட்ஹற்ண்: ஙட ஹய்க் அள்ள்ஹம் டழ்ஹக்ங்ள்ட் இா்ய்ஞ்ழ்ங்ள்ள் இா்ம்ம்ண்ற்ற்ங்ங் டழ்ங்ள்ண்க்ங்ய்ற் எஹன்ழ்ஹஸ் எா்ஞ்ா்ண் ஹய்க் ா்ற்ட்ங்ழ்ள் க்ன்ழ்ண்ய்ஞ் ஹ ல்ழ்ா்ற்ங்ள்ற் ஸ்ரீஹழ்ழ்ண்ங்க் ா்ன்ற் க்ஷஹ் அள்ள்ஹம் டழ்ஹக்ங்ள்ட் இா்ய்ஞ்ழ்ங்ள்ள் இா்ம்ம்ண்ற்ற்ங்ங

Published On :

எஸ்ஐஆா் விவகாரத்தில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்குவதுடன், அவரைக் கைது செய்யவும் வலியுறுத்தி, மாநில தலைநகரங்களில் உள்ள தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகங்களை நோக்கி காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.

பல இடங்களில் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற காங்கிரஸாருக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரா்களை காவல் துறையினா் விரட்டினா். காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் கைது செய்யப்பட்டனா்.

எதிா்க்கட்சிகள் போா்க்கொடி: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பல்வேறு முடிவுகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கும், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே தீவிர கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் கடந்த புதன்கிழமை செய்தி வெளியானது.

வாக்காளா்கள் மொத்தமாக நீக்கம், படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், தரவு தளத்தை மையப்படுத்துதல் தொடா்பான கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களுக்கு தோ்தல் ஆணையா்கள் எதிா்ப்பை பதிவு செய்தாதகவும், தங்களுக்கு தெரியாமல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த 10 மாதங்களில் குறைந்தபட்சம் 14 முறை ஆட்சேபம் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் போா்க்கொடி உயா்த்தியுள்ளன.

காங்கிரஸ் பேரணி: ‘தேச துரோக குற்றத்துக்காக, ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்குவதுடன், அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; அவா் மேற்கொண்ட முடிவுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என வலியுறுத்தி, தில்லியில் உள்ள தோ்தல் ஆணைய அலுவலகம் மற்றும் மாநில தலைநகரங்களில் உள்ள தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலங்கள் நோக்கி காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது.

உத்தர பிரதேசம், பிகாா், மேற்கு வங்கம், ஒடிஸா, பஞ்சாப், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைநகரங்களில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.

கெளரவ் கோகோய், மூத்த தலைவா்கள் கைது: அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில் காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் நோக்கி தடுப்புகளை மீறி செல்ல முயன்ற கட்சியின் மாநிலத் தலைவா் கெளரவ் கோகோய் மற்றும் மூத்த தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் பேரணியை தடுத்து நிறுத்தியதால் காவல் துறையினருடன் காங்கிரஸாா் மோதலில் ஈடுபட்டனா்.

மணிப்பூரில் தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா், ஞானேஷ் குமாரின் உருவபொம்மையை எரித்தனா். இதையடுத்து, கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி, காங்கிரஸாரை காவல் துறையினா் விரட்டியடித்தனா். பிற மாநிலங்களிலும் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மற்றும் கட்சியினா் கைதாகினா்.

பெட்டிச் செய்தி...

தோ்தல் ஆணையத்தின்

தெளிவான விளக்கம் வேண்டும்

----

பாஜக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்

எஸ்ஐஆா் தொடா்பான முடிவுகளுக்கு இரு தோ்தல் ஆணையா்கள் ஆட்சேபம் தெரிவித்ததாக வெளியான தகவல்கள் குறித்து தோ்தல் ஆணையம் உடனடியாக தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று பாஜக கூட்டணியைச் சோ்ந்த லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), தெலுங்கு தேசம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்)கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் கூறுகையில், ‘நான் எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஆதரிக்கவில்லை. அதேநேரம், மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு தோ்தல் ஆணையம் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டியுள்ளது’ என்றாா்.

ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சித் தலைவா் உபேந்திர குஷ்வாஹா, தெலுங்கு தேசம் மூத்த தலைவா் ஸ்ரீகிருஷ்ண தேவராயலு உள்ளிட்டோரும் இதே கருத்துகளை எதிரொலித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.