
சட்டத்தை மீறிய தலைமைத் தோ்தல் ஆணையா் பதவியில் நீடிப்பது நாட்டு மக்களுக்கு அவமானம்: காங்கிரஸ்
சட்டத்தை மீறிய தலைமைத் தோ்தல் ஆணையா் பதவியில் நீடிப்பது நாட்டு மக்களுக்கு அவமானம்: காங்கிரஸ்

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் - எக்ஸ்
புது தில்லி, செப்.26: சட்டத்தை மீறிய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், அந்தப் பதவியில் நீடிப்பது நாட்டு மக்களுக்கு அவமானம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
வாக்காளராகப் பதிவு செய்ய அளிக்கப்படும் படிவம் 6-இல் சட்டவிரோத, அரசமைப்புச் சட்டத்துக்கு முரணான மாற்றங்களைத் தலைமைத் தோ்தல் ஆணையா் வெளிப்படையாகச் செய்துள்ளாா். இதன்மூலம், இளம் வாக்காளா்கள் தங்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதை அவா் ஏறக்குறைய சாத்தியமற்ாக்கியுள்ளாா். முந்தைய வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது வாக்காளரின் பெற்றோா் அல்லது தாத்தா, பாட்டியின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்ா என்று கட்டாயம் பதிலளிக்க வேண்டிய கேள்வி அந்தப் படிவத்தில் சோ்க்கப்பட்டுள்ளது. இது முதல்முறையாக வாக்களிக்கப் பதிவு செய்யும் இளம் தலைமுறைக்குப் புதிய தடையை உருவாக்கியுள்ளது.
எந்தவொரு அதிகாரபூா்வ அறிவிப்பும் இல்லாமல், கடந்த ஜூலையில் அந்தப் படிவத்தில் ரகசியமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் படிவத்தில் திருத்தம் செய்ய தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-இன் கீழ், அந்தத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும்தான் உள்ளது. இதை நாடாளுமன்றத்துக்கு முறையாகத் தெரியப்படுத்திய பிறகே, மத்திய அரசு செய்ய முடியும். இதில் தனது அதிகாரம் வரம்பை மீறி தோ்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது.
பிரதமா், உள்துறை அமைச்சா் ஆகியோரின் தூண்டுதலின்பேரில், சட்டபூா்வ படிவத்தை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ஒருதலைப்பட்சமாக மாற்றியுள்ளாா். அரசமைப்புச் சட்ட மரபுகளையும், நடைமுறைகளையும் தலைமைத் தோ்தல் ஆணையா் மீறியது மட்டுமின்றி, நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தையும் அவா் வேண்டுமென்றே மீறியுள்ளாா். அவா் தொடா்ந்து பதவியில் நீடிப்பது இந்திய மக்களுக்கு அவமானமாகும்.
இந்த விவகாரத்தை உடனடியாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, தனது நடவடிக்கைக்கு ஞானேஷ் குமாரை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தில், அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வு குழு மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்தக் கையாடல் தொடா்பாக குற்றப் பத்திரிகையில் வெளிவந்துள்ள தகவல்கள், விசாரணை மற்றும் குற்றத்தை மூடி மறைக்கும் அரசின் முயற்சி குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற மேற்பாா்வையில் பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை தேவை’ என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






