
மாணவர்களின் உரிமை மீறப்பட்டால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது! தலைமை நீதிபதி
அமைதி போராட்டத்தை ஒடுக்க முடியாது என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியது பற்றி..

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் - file photo
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான மாணவர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதில் நீதித்துறை உறுதியாக இருப்பதாகவும், அந்த உரிமை மீறப்படும்போது நீதிமன்றங்கள் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்றும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தினார்.
பாட்னாவில் உள்ள சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் "வெளிப்படையான கலந்துரையாடலில்" ஈடுபட்டபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். நேர்மையான கேள்வி-பதில் அமர்வை விரும்புவதாக அவர் தெளிவுபடுத்தினார்.
இதுதொடர்பாக பல்கலை வெளியிட்ட அறிக்கையின்படி,
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது காவல்துறை காட்டும் அணுகுமுறை குறித்து மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். தில்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகக் கரப்பான் பூச்சி கட்சி முன்னெடுத்த போராட்டங்களை இது மறைமுகமாகக் குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து ஒன்றிற்கு எதிரான நையாண்டித்தனமான இணையவழிப் பிரசாரமாகவே இந்தக் கட்சி உருவானது. இருப்பினும், தனது கருத்துக்கள் சூழலுக்குப் புறம்பாகத் தவறாகச் சித்திரிக்கப்பட்டதாக அவர் பின்னர் விளக்கமளித்திருந்தார்.
காவல்துறையின் கொடூரமான ஒடுக்குமுறை தொடர்பான புகார்கள் எழும்போது நீதிமன்றங்கள் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்று கேள்வி எழுப்பியவரிடம் கூறிய தலைமை நீதிபதி, மாணவர்களின் அமைதியான போராட்ட உரிமையைப் பாதுகாப்பதில் நீதித்துறை கொண்டுள்ள உறுதிப்பாட்டைத் தெளிவாக மீண்டும் வலியுறுத்தினார்.
மற்றொரு மாணவர், கொலீஜியம் (நீதிபதிகள் நியமனக் குழு) அமைப்பிற்குள் நிலவும் மாறுபட்ட கருத்துக்கள் ஏன் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அவை ஏன் ஒருபோதும் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை?
அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, "எவ்வளவு நல்ல நோக்கத்துடன் தகவல்களை வெளியிட்டாலும், அது பரிசீலனையில் உள்ள தனிநபரைச் சங்கடமான அல்லது பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
தனிப்பட்ட கண்ணியம், கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெளிப்படைத் தன்மைக்கும் சில எல்லைகள் உள்ளன. கொலீஜியத்தின் கூட்டக்குறிப்புகளில் ஒரு நீதிபதி அல்லது தலைமை நீதிபதி குறித்த எதிர்மறையான கருத்துக்கள் இடம்பெற்றால், அவர்கள் எவ்வாறு தொடர்ந்து பணியாற்ற முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





