பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!

ராஞ்சி: மதுக்கடைக்குள் புகுந்து மது அருந்திவிட்டு அங்கேயே உறங்கிய குரங்கு!

ராஞ்சியில் மதுக்கடைக்குள் புகுந்த குரங்கு பற்றி....

Ranchi: Female monkey enters liquor shop, drinks alcohol and falls asleep inside; rescued

குரங்கு...

Published On :

ராஞ்சியில் மதுக்கடைக்குள் புகுந்த குரங்கு ஒன்று மது அருந்திவிட்டு அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியின் பிளாக் சௌக் பகுதியில் உள்ள மதுக்கடையில் பெண் குரங்கு ஒன்று வெள்ளிக்கிழமை புகுந்துள்ளது. எதிர்பாராத விதமாக கடைக்குள் புகுந்த குரங்கைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடைக்காரர் அதை வெளியேற்ற முயன்றபோது, ​​அக்குரங்கு அவரைக் கடித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் அந்தக் குரங்கு கடைக்குள் இருந்த பாட்டிலில் இருந்த மதுவை அருந்திவிட்டு அங்கேயே படுத்து உறங்கியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியதால், கடைக்கு வெளியே மக்கள் கூட்டம் கூடியது. மக்கள் அந்தக் குரங்கைப் பார்க்கவும், இந்தச் சம்பவத்தை புகைப்படம் மற்றும் காணொளியாகப் பதிவு செய்யவும் ஆர்வம் காட்டினர்.

கடைக்குள் குரங்கு உறங்கிய பிறகு, இதுகுறித்து மீட்புக் குழுவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர், குரங்கை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுக்கடைக்குள் குரங்கு இருக்கும் புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Summary

Afemale monkey video is going viral after the animal reportedly entered a liquor shop at Block Chowk in Ormanjhi, Ranchi, on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.