
உஜ்ஜைனியில் 600 ஆண்டு மசூதி இடிப்பு விவகாரத்தில் வன்முறைக்கு வழிவகுத்த ‘ஏஐ’!
உஜ்ஜைனியில் 600 ஆண்டு பழைமை மசூதி இடிப்பு தொடர்பான வன்முறைக்கு செய்யறிவு காரணமாக இருந்ததைப் பற்றி...
உஜ்ஜைனியில் பழைமையான ஷாஜி மசூதி.
உஜ்ஜைனியில் 600 ஆண்டு பழைமையான மசூதி இடிப்பு தொடர்பான வன்முறைக்கு செய்யறிவு காரணமானதாக மத்தியப் பிரதேச காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் 2028-ல் சிம்ஹஸ்த கும்பமேளா நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக காந்தல் சந்திப்பு முதல் கோபால் ஆலயம் வரை 900 மீட்டர் தூரத்துக்கு 15 மீட்டர் வரை சாலையை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இவ்வழியே அமைந்துள்ள 635 ஆண்டுகள் பழைமையான ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்க அல்லது மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியை முழுமையாக இடித்து தரைமட்டம் ஆக்குவதுபோல இணையத்தில் விடியோ வெளியானது. இந்த விடியோவை பார்த்து மசூதி முன் கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மசூதியை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய காவல் துறையினர் 15 பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் ஷாஹி மசூதி முழுமையாக இடிக்கப்பட்டது போன்று செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகள், வதந்திகளைப் பரப்பி வன்முறையைத் தூண்டியதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற விடியோ பதிவுகள் பரப்பப்பட்டதே மசூதிக்கு வெளியே பெருங்கூட்டம் கூடி, வன்முறையைத் தூண்டியதற்கு காரணமாக அமைந்தது என்று உஜ்ஜைனி காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொளிகள் இணையத்தில் பரவிய நிலையில், 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஆய்வு செய்ததில் 20 பேரில் 5 பேர் அந்த விடியோவை பகிர்ந்ததை காவல் துறையினர் உறுதிசெய்து முதல்தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Summary
AI-generated videos falsely showing the entire Shahi Masjid being demolished fuelled rumours and helped mobilise a crowd in Ujjain. The videos circulated widely online, with over 100 Instagram accounts under scrutiny and 5 of the 20 people named in FIRs being content creators.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





