
செய்யறிவின் அபாயப் பார்வை படாத படிப்புகள் என்னென்ன?
செய்யறிவின் அபாயப் பார்வை படாத படிப்புகள் என்னென்ன என்பது பற்றி..

செயற்கை நுண்ணறிவு (கோப்புப்படம்) - கோப்புப்படம்
செய்யறிவு காரணமாக எந்தப் படிப்பு படித்தால் வேலை நிச்சயம், என்ன படிக்கலாம், எந்தப் படிப்பை செய்யறிவால் நிரப்ப முடியாது என்று இந்திய மாணவர்கள் தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.
கம்ப்யூட்டர் படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம், வெளிநாட்டில் வேலை செய்யலாம் என்ற காலம் மலையேறிவிட்டது.
தற்போது செய்யறிவு உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், செய்யறிவு, ரோபோ போன்றவை தொட முடியாத சில படிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.
மனிதனின் உணர்வுப்பூர்வமான பணி, சிந்திக்கும் ஆற்றலை அடிப்படையாக வைத்தப் பணிகளை செய்யறிவால் நிரப்ப முடியாது என்று தற்போது வரை கருதப்படுகிறது.
எனவே, செவிலியர் பயிற்சியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், சிறுநீரகவியல் நிபுணர்கள், மறுவாழ்வு மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து செவிலியர்கள் போன்ற பதவிகள் மிகவும் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன,
மேலும் இவற்றில் செய்யறிவைப் புகுத்தி இயந்திரமயமாக்குவது என்ற அபாயம், ஏறக்குறைய பூஜ்ஜியம்.
இந்தப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்படுத்தப்படலாம், உதவக்கூடும் என்றாலும் நோயறிதல், நோயாளிகளுக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவு அளிப்பது,எந்த விதமான சிகிச்சையை தொடர்வது என முடிவெடுத்தல் மற்றும் மனிதர்களுடனான தொடர்பு போன்ற முக்கியப் பொறுப்புகள் அடிப்படையில் மனிதர்களுக்கே உரியவையாக தற்போது வரை இருக்கின்றன. (இதுவும் எத்தனை நாளைக்கோ?)
பல் மருத்துவம் போன்ற படிப்புகளில், வெறும் அறிவு மட்டும் போதாது, சில நுணுக்கங்கள், மனிதர்களை அணுகும் முறை, பிரச்னைகளுக்கான தீர்வுகளை அலசுதல் போன்றவற்றை மனிதர்களால்தான் கொடுக்க முடியும், இதற்கு செய்யறிவு உதவலாம், தவிர முழுமையாக மாற்ற முடியாது என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







