முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

அம்பத்தூர் தொகுதிக்கு என்னென்ன வேண்டும்? பட்டியலிட்ட பாலமுருகன்!

அம்பத்தூர் தொகுதிக்கு என்னென்ன வேண்டும் என்பது குறித்து பட்டியலிட்ட பாலமுருகன் எம்எல்ஏ

News image

பாலமுருகன் எம்எல்ஏ - video grab

Updated On :6 வினாடிகள் முன்பு

சட்டப்பேரவையில் அம்பத்தூர் எம்எல்ஏ பாலமுருகன் கூறுகையில், 2026 - 27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கைகளுக்கு ஆதரவு மற்றும் தமிழக அரசு கொண்டு வந்த நீட் உள்ளிட்ட தீர்மானங்களுக்கு எங்களது தொகுதியின் சார்பாக வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

பிறகு, அம்பத்தூர் தொகுதிக்கு ஒரு அரசுப் பொது மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று பாலமுருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

அதிக மக்கள் தொகை கொண்ட அம்பத்தூர் தொகுதிக்கு என ஒரு அரசுப் பொது மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் அவசர சிகிச்சை பெற வேண்டும் என்றாலும் 15 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அல்லது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் செல்லும் நிலை உள்ளது.

சென்னைப் போக்குவரத்து நெரிசலால், அவசரகால சிகிச்சைகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, அம்பத்தூரில் 24 மணி நேரம் செயல்படும் அரசு பொது மருத்துவமனை ஒன்று, அவசர சிகிச்சை மற்றும் விபத்துப் பிரிவுடன் கூடிய மருத்துவமனை அமைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அம்பத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது வீடு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதே. பல ஆண்டுகளாக தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு முறையான வீடுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Summary

What does the Ambattur constituency need? Balamurugan lists the requirements!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.