தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

முதல்வர் விஜய் வரும்போது உதயநிதி எழுந்து நிற்க வேண்டுமா? பேரவையில் விவாதம்

பேரவைக்கு முதல்வர் விஜய் வரும்போது உதயநிதி எழுந்து நிற்க வேண்டுமா? என்று பேரவையில் விவாதம் நடைபெற்றது.

TN Assembly

முதல்வர் விஜய் - உதயநிதி வாதம் - TN Assembly

Published On :

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பேரவைக்குள் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமர்ந்திருப்பது குறித்து தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், அவையில் கேள்வி எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்ற போது, சட்டப்பேரவையின் கண்ணியம் குறித்து முன்னாள் முதல்வரும் திமுக எம்எல்ஏவுமான ஓ பன்னீர்செல்வம் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவையில் கண்ணியமாக பேச வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அதை முதல் முறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக வந்துள்ள நாங்கள் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவருக்கு முதலில் அவையின் கண்ணியத்தைக் கற்பிக்க வேண்டும். முதல்வர் விஜய் பேரவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பதில்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.

முதல்வருக்கு மரியாதை தர வேண்டும் என்ற கண்ணியத்தை எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்லித்தர வேண்டும், 8 கோடி மக்களின் பிரதிநிதியான முதல்வர் ஜோசப் விஜய் உள்ளே வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் அவையில் அமர்ந்திருக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பினார் அமைச்சர்.

இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, முதல்வர் அவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா? கூடாதா? என்று அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கே.என். நேரு, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்றதில்லை. அது அது அவரவர் நடைமுறை. இந்த விவகாரத்தை அவையில் சொல்வதில் தவறில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வது தவறு என்று பதிலளித்து விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

Summary

Should Udhayanidhi stand up when Chief Minister Vijay arrives? Debate in the Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.