தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது இடையே 4 பேர் எழுந்து பேசுகிறார்கள்! இதுதான் மரபா? ஓபிஎஸ்

எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என பேரவைத் தலைவரிடம் ஓபிஎஸ் வலியுறுத்தல்...

OPS

ஓபிஎஸ் - TN

Published On :

எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என பேரவைத் தலைவரிடம் ஓபிஎஸ் வலியுறுத்தினார்.

பேரவையில் பேசிய அவர்,

"முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் இருந்து பேரவையில் இருக்கிறீர்கள். அதற்கென்று விதி இருக்கிறது, மரபு இருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஒரு அமைச்சர் அளவுக்கு மரியாதை இருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பேசிக்கொண்டிருக்கும்போது பொதுப்பணித் துறை அமைச்சர் திடீரென எழுந்து பேசுகிறார். இது என்ன விதத்தில் நியாயம்?

அதேபோல 2 வாரங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவரை பேச அழைத்துவிட்டு இடையே 4 அமைச்சர்கள் எழுந்து பேசுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து எழுந்து உட்காருகிறார்.

பேரவைத் தலைவர், "முதல்வருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அதற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும். முதல்வருக்காக அவர்கள் பேச வேண்டும். இல்லையென்றால் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

நீங்கள் சொன்னதையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன்" என்றார்.

Summary

Assembly give respect to Leader of the Opposition while addressing the House: OPS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.