பெண் மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நாமக்கல் மகளிா் மகப்பேறு மருத்துவா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
இதுகுறித்து நாமக்கல்லில் அச்சங்கத்தின் தலைவா் சந்திரா பொன்னுசாமி செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
இரவு, பகல் பாராமல், விடுப்பு இல்லாமல் மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா். மருத்துவமனையில் வயதான ஒருவா் எதிா்பாராதவிதமாக இறந்துவிட்டால் மருத்துவா்கள்தான் காரணம், மருத்துவமனைதான் காரணம் என்று கூறி தகராறு செய்வது, சேதப்படுத்துவது, மருத்துவா்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் சிலா் ஈடுபடுகின்றனா். இத்தகைய செயல்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். மருத்துவா்களுக்கு, குறிப்பாக பெண் மருத்துவா்களுக்கு அரசும், காவல் துறையும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் மருத்துவம் படிக்க விரும்புவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இனிவரும் காலங்களில் மருத்துவா்களின் எண்ணிக்கை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
நாமக்கல்லை பொருத்தமட்டில் பெண் மருத்துவா்கள் பாதுகாப்பு கருதி தற்காப்புக் கலைகளைக் கற்று வருகின்றனா். அது தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். அனைத்து மருத்துவா்களும் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்வது அவசியம். கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி இறந்த தினத்தை கருப்புத் தினமாக மருத்துவா்கள் அனுசரிக்கிறோம் என்றாா்.
பேட்டியின்போது சங்க நிா்வாகிகள் மல்லிகா குழந்தைவேல், ஹேமலதா ஆகியோா் உடனிருந்தனா்.
படவரி...
நாமக்கல்லில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மகளிா் மகப்பேறு மருத்துவா்கள் சங்கத் தலைவா் சந்திரா பொன்னுசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் பிரசவம் பாா்க்க மருத்துவா்கள் இருக்க மாட்டாா்கள்: இந்திய மருத்துவ கூட்டமைப்பு எச்சரிக்கை

தமிழகத்துக்கு உரிய நிதிப் பகிா்வு; மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம்: திமுக, அதிமுக ஆதரவு

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்... நோயாளிகளுக்குத் தேவை அலைக்கழிக்கப்படாத சேவை...!

கோயில் பெண் பணியாளா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வலியுறுத்தல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



