
எனர்ஜி டிரிங்க் லேபிளுக்கு தடையில்லை! ரெட் புல்லுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
ரெட் புல் எனர்ஜி டிரிங்க் பற்றி உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு பற்றி..

உயர்நீதிமன்றம் அதிரடி - பிரதிப் படம்
ரெட் புல் இந்தியத் தனியார் நிறுவனம் தனது தயாரிப்பில் எனர்ஜி டிரிங்க் (ஆற்றல் பானம்) என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பாட்டிகளில் எனர்ஜி டிரிங்க் எனக் குறிப்பிடுவது வாங்குவோருக்கு உடலுக்கு உடனடி ஆற்றல் அல்லது சிறப்புச் சுகாதார நன்மைகளை அளிப்பது போன்ற தவறான எண்ணத்தை உருவாக்கும் எனக் கூறி ரெட் புல், பெப்சி, கோக், மான்ஸ்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அந்த சொற்களை மாற்ற 90 நாள்கள் அவகாசம் வழங்கி கடந்த ஜூலை மாதம் ஃப்எஸ்எஸ்ஏஐ நோடீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து ரெட் புல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் விசாரித்தது. மனுதாரர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் விதிகளுக்கு மாறாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனது நிலைப்பாட்டை விளக்க நிறுவனத்திற்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்கவில்லை. எனவே, ரெட் புல் நிறுவனத்திற்கு விளக்கம் கோரும் அறிவிப்பை அனுப்பி, அதன் தரப்பு வாதத்தைக் கேட்கும் வாய்ப்பை வழங்கிய பிறகு, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இந்த விவகாரத்தில் எஃப்எஸ்எஸ்ஏஐ புதிய முடிவை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ரெட் புல் நிறுவனம் கூறுகையில், தனிப்பட்ட முறையில் விளக்கம் கோரும் அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றும், ஜூன் 30-ஆம் அனுப்பப்பட்ட கடிதமே அதற்கான அறிவிப்பாகக் கருதப்பட்டது என்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்தியாவில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் தனது பானத் தயாரிப்புகளுக்கு "எனர்ஜி ட்ரிங்க்" என்ற குறியீட்டைப் பயன்படுத்தி வருவதாகவும், கஃபின் கலந்த பானங்கள் பிரிவில் இந்தச் சொல்லைப் பயன்படுத்த முன்னதாகவே அங்கீகரித்திருந்ததாகவும் கூறியது. எஃப்எஸ்எஸ்ஏஐ -யின் உத்தரவை எதிர்த்து 'ரெட் புல்' நிறுவனம் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





