இதயம் தொட்ட இசை

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், திரைப் பாடல்களின் மூலமாகவேதான் நமது பெரும்பாலான உணர்வுகளை அனுபவித்து முடிக்கிறோம். நம் ஜீவனுடன் ஒன்றிய அப்படிப்பட்ட பாடல்களை நமக்கு வழங்கிய பல அற்புதமான இசையமைப்பாளர்களுடனும், அவர்களின் பாடல்களுடனும்தான் இந்தத் தொடரில் பயணிக்கப்போகிறோம். 

தவிர, இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், திரைப்படங்கள் என்று மேலும் திரையுலகம் சார்ந்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்தத் தொடரில் அலசப்போகிறோம். தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, ஆங்கிலம் என்று பல பாடல்களையும் பார்க்கப்போகிறோம். மனிதர்களை இணைக்கும் கலை வடிவங்களில் இசையே முதன்மையானது என்ற வகையில், இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடலை எடுத்துக்கொண்டு, அப்பாடலின் மூலம் பெருகும் இசையை அனுபவிக்கலாம் வாருங்கள்.

கருந்தேள் ராஜேஷ்

கருந்தேள் ராஜேஷ்

‘கருந்தேள்’ ராஜேஷ், திரைப்படங்களைப் பற்றி விரிவாக அலசும் விமர்சகர். தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைகளை செப்பனிட்டுக்கொடுக்கும் திரைக்கதை ஆலோசகராகவும் (Screenplay Consultant) இருக்கிறார். ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவர். பல பத்திரிகைகளில் தொடர்ந்து திரைப்படங்களைப் பற்றி விரிவாக எழுதி வருகிறார்.

வீடியோ கேம்கள், பாடல்கள், உலக சினிமா, டாரண்டினோ, கய் ரிட்சீ, David Fincher, இயக்குநர் ஸ்ரீதர், மணிவண்ணன், ஆர்.டி. & எஸ்.டி. பர்மன்கள், ஏ.எம். ராஜா, கிஷோர் குமார், எம்.எஸ்.வி., ஆர்தர் கானன் டாயல், தேவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் - இவருக்குப் பிடித்த விஷயங்களில் சில. கோவையில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது குடும்பத்தோடு பெங்களூருவில் வசிக்கிறார். www.karundhel.com என்ற வலைத்தளத்தில், பல வருடங்களாகத் திரைப்படம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளையும் தொடர்களையும் வீடியோ கேம் விமர்சனங்களும் எழுதி வருகிறார்.

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை