உத்தரமேரூர் புதுவாழ்வுத் திட்டமும், காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியும் இணைந்து செவ்வாய்க்கிழமை இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தின.
பாலேஸ்வரம், ஆனம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற இம்முகாமுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார்.
புதுவாழ்வுத் திட்ட மாவட்ட மேலாளர் வி.தனசேகர் முகாமை தொடங்கி வைத்தார். மீனாட்சியம்மாள் பாலிடெக்னிக் ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன், உதவித் திட்ட மேலாளர் சுபான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இம்முகாமில் 180 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.
கண், இதயம், எலும்பு, மூட்டு வலி நோயாளிகள் 30 பேர் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
இம் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தஅழுத்தம் பரிசோதிக்கப்பட்டு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
இம்முகாமுக்கான ஏற்பாடுகளை புதுவாழ்வு திட்ட பகுதி அணித் தலைவர் ஜே.மணிகண்டன், எஸ்.சுனில்குமார், கே.கலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர். ஊராட்சிச் செயலர் பி.ஏழுமலை நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6 முறை தேசிய விருது வென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா!

கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஐடி, பார்மா பங்குகள் லாபம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


