கூடுவாஞ்சேரி அருகே திரெளபதியம்மன் ஆலய கும்பாபிஷேகம் புதன்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே கால்வாய் கிராமத்தில் திரெளபதியம்மன் ஆலயம் உள்ளது.
இக்கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் மாலை ஆசார்யவர்ணம், அனுகிரஹம், பகவத், அக்னிபிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், பாலிகை பிரதிஷ்டை, பூர்ணாஹூதியுடன் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை காலை முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அன்று மாலை 5 மணிக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து திரெளபதியம்மன், பஞ்சப் பாண்டவர்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா, புதன்கிழமை காலை 5 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கியது. பின்னர் கன்யாபூஜை, சுமங்கலிபூஜை, தசதானபூஜை ஆகியன நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா பூர்ணாஹூதியாகி, மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6 முறை தேசிய விருது வென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா!

கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஐடி, பார்மா பங்குகள் லாபம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


