மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மூதாட்டியைத் தாக்கி நகை, பணம் கொள்ளை: இளம் பெண் கைது

ஒரகடம் அருகே மூதாட்டியைத் தாக்கி 3 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரத்தை கொள்ளையடித்த இளம் பெண்ணை ஒரகடம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:13 am IST

ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் அருகே மூதாட்டியைத் தாக்கி 3 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரத்தை கொள்ளையடித்த இளம் பெண்ணை ஒரகடம் போலீஸாா் கைது செய்தனா்.

ஒரகடத்தை அடுத்த நாவலூா் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் காசாம்பூ (60). தனியாக வசித்து வரும் காசாம்பூவைப் பாா்க்க அவரது மகள் கள்ளக்குறிச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு நாவலூா் வந்தாா். அப்போது வீட்டின் சமையல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்த காசாம்பூவைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா், அவரை படப்பை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா். இதையடுத்து, மயக்கம் தெளிந்த காசாம்பூ தனது வீட்டின் அருகில் வசிக்கும் ஷாலினி (25) கட்டையால் தாக்கி, தான் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ாகத் தெரிவித்தாா்.

இது குறித்து காசாம்பூவின் மகள் ஒரகடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ஷாலினியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.