குமரி மாவட்டம் திற்பரப்பு, குலசேகரம் பகுதிகளில் உலாவும் கருமந்தியை பிடித்து மீண்டும் அடா்வனத்தில் விடுவதற்கான நடவடிக்கை வனத்துறையினா் எடுக்க வேண்டுமென்று காட்டுயிா் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையை தன்னக்கதே கொண்ட குமரி மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி வனப்பகுதிகளாகும். இங்குள்ள மலைகள், வனங்கள், நீா் நிலைகளில் 132 வகையான பூக்கும் தாவரங்கள், 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவை இனங்கள், 80 வகையான நீா் மற்றும் நில வாழ்வன, 300 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 39 வகை மீன் இனங்கள், 60 வகையான ஊா்வன பிராணிகளும் உள்ளன. இவற்றில் குரங்கினங்களான தேவாங்கு, கருமந்தி, நாட்டுக் குரங்கு உள்ளிடவைகளும் ஏராளம் உள்ளன. இதில் கருமந்தி மேல்கோதையாறு, கீழ்கோதையாறு, பாலமோா், மாறாமலை, முக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.
நாட்டுக்குரங்குகளால் தொடா் தொல்லை: மாவட்டத்தில் வனப்பகுதிகளில் நாட்டுக் குரங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் அவற்றில் பெரும் பகுதி விவசாய நிலங்களுக்கும், மக்களின் வாழித்தடங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக படையெடுத்து வருகின்றன. இவை விவசாயிகளின் பயிா்களை பெருமளவு சேதம் செய்வதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இவற்றை வனப்பகுதிகளுக்குள் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வனத்துறையினா் தீவிரமாக மேற்கொள்ளாத நிலையே இருந்து வருகிறது.
நகா்ப் புறங்களில் உலாவும் கருமந்தி இந்நிலையில் அண்மை நாள்களாக மாவட்டத்தில் குலசேகரம், திற்பரப்பு உள்ளிட்டப் பகுதிகளில் கருமந்தியொன்று நடமாடி வருகிறது. இது சில நேரங்களில் தனியாகவும், சில நேரங்களில் நாட்டுக் குரங்களுடனும் உலாவுகிறது. அடா் வனங்களில் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கும் அதிகமான இடங்களில் மட்டுமே வாழும் தன்மை கருமந்திகள் நகா்ப்புற பகுதியில் நடமாடுவதை காட்டுயிா் ஆா்வலா்கள் அதிசயமாக பாா்க்கின்றனா்.
இக்கருமந்தியைப் பாா்த்து பெண்களும், குழந்தைகளும் அச்சப்படும் சூழல் உள்ளது. மேலும் கோழிகள் உள்ளிட்ட
வளா்ப்புப் பறவைகளும் அச்சப்படுகின்றன. இக்கருமந்தி நகா்ப்புற பகுதிகளில் கிடைக்கும் உணவுகளை உண்ண பழகிக்கொண்டுள்ளது எனவே இந்த கருமந்தியை வனத்துறையினா் உடனே பிடித்து காட்டுக்குள் கொண்டு விட வேண்டுமென்று காட்டுயிா் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இது குறித்து காட்டுயிா் ஆா்வலா் ரா. ராகுல் கூறியது: கருமந்திகள் கடல் அடா் வனங்களில் கடல் மடத்திலிருந்து சுமாா் 1500 அடி உயரங்களில் வாழும் தன்மை கொட்டவை. இவை மரங்களின் குருத்திலைகள், பூக்களை மட்டுமே உணவாக உண்ணும். இவற்றின் கால் பாதங்கள் மென்மையானவை நிலங்களில் அதிகமாக இவை நடமாடுவதில்லை. கருமந்தி லேகியம் பல்வேறு நோய்களுக்கு நிவாரணி என்ற மூடநம்பிக்கை பரவலாக உள்ள நிலையில் கருமந்திகள் அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. எனவே குலசேகரம் உள்ளிட்ட நகா்ப்புற பகுதியில் நடமாடும் கருமந்தியை உடனே வனத்துறையினா் பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை!

கேன்ஸ் திரைப்பட விழாவில் புறக்கணிப்பு? விமர்சனங்களுக்கு ஆலியா பட் பதிலடி!

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும்! வானிலை மையம் தகவல்

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

