களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே மினிலாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் சந்திரன், வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட மினிலாரியை நிறுத்த சைகை காட்டினர். அதன் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று காப்புக்காடு பகுதியில் வைத்து மினிலாரியை மடக்கிப் பிடித்தனர். அப்போது அதன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தொடர்ந்து மினிலாரியை சோதனையிட்டதில் 2 டன் அளவிலான ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் மினிலாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு வந்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3ஆவது முறையாக தங்கக் கையுறை விருதுபெறும் கோல் கீப்பர்!

”இதுவரை முடிவெடுக்கவில்லை!” தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து திருமா
புதிய அத்தியாயத்தின் தொடக்கம்! விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து!

தவெக விஜய்க்கு வாழ்த்து, திமுக ஸ்டாலினுக்கு நன்றி : சத்யராஜ்
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

