புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

குமரி கடற்கரை பகுதியில் தீ விபத்து: 64 கடைகள் எரிந்து சேதம்

கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே முக்கடல் சங்கமம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

News image

தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பாா்வையிடுகிறாா் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.

Updated On :10 ஜனவரி 2021, 12:41 am IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே முக்கடல் சங்கமம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சிறுவா் விளையாட்டுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், நறுமணப் பொருள்கள் என 70-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளில் அதிகாலை 2.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

நாகா்கோவில், கன்னியாகுமரி பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புபடையினா் வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் 64 கடைகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஆஸ்டின், அங்கு சென்று பாா்வையிட்டாா். அப்போது, திமுக ஒன்றியச் செயலா் என். தாமரைபாரதி, பேரூராட்சி முன்னாள் தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மயில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவா் எம்.ஆா்.காந்தி, மாவட்ட அமமுக செயலா் பி.செந்தில்முருகன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினா்.

சேதம்: தீ விபத்தில் ரூ. 2 கோடிக்கும் அதிகமான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். தீ விபத்தின் காரணம் குறித்து கன்னியாகுமரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக கரோனா பொது முடக்கத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த வியாபாரிகள், சில நாள்களுக்கு முன்புதான் வியாபாரத்துக்கு ஏராளமான பொருள்களை வாங்கி விற்பனையை தொடங்கினா். இந்நிலையில் தீ விபத்தால் வியாபாரிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.