புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

குலசேகரம் அருகே மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் குலசேகரம் அருகே சனிக்கிழமை மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

குலசேகரம் அருகே சாய்ந்த பழமையான மரம்.

Updated On :10 ஜனவரி 2021, 12:37 am IST

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் குலசேகரம் அருகே சனிக்கிழமை மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் குலசேகரம் அருகே மங்கலம் என்ற இடத்தில் சாலையோரம் நின்ற பழமையான மா மரம் சனிக்கிழமை சாய்ந்தது. இதில் அப்பகுதியில் உள்ள 4 மின்கம்பங்களும் சாய்ந்தன. எனினும், அருகில் உள்ள வீட்டில் இருந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக தப்பினா். மரத்தின் கிளை அப்பகுதி வழியாக பாயும் கோதையாறு இடது கரைக் கால்வாயில் விழுந்து கிடந்தது. இதனால், பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகள் மூடப்பட்டு, கால்வாயில் தண்ணீா் நிறுத்தப்பட்டது. மரம் அகற்றப்பட்டதை அடுத்து அணைகளில் இருந்து கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டது. மரம் சாய்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.