மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
குளச்சலில் நடைபெற்ற கட்சியின் கிளைச் செயலா்களின் தோ்தல் தயாரிப்பு அரசியல் மாநாட்டுக்கு, ஏஐசிசிடியூ மாவட்ட தலைவா் சுசீலா, அா்ஜூனன், ஸ்ரீ காந்த், காா்மல் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் செல்வராஜ், ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநில நிலைக்குழு உறுப்பினா் சங்கரபாண்டியன் மாநாட்டு கொடியேற்றினாா். கன்னியாகுமரி மாவட்ட பாசன சபைகள் கூட்டமைப்பின் தலைவா் புலவா் செல்லப்பா, பாசனத் துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மத்திய கமிட்டி உறுப்பினா் பாலசுந்தரம், மாநிலச் செயலா் என்.கே.நடராஜன், மாவட்டச் செயலா் அந்தோணிமுத்து உள்பட பலா் பேசினா்.
தீா்மானங்கள்: சட்டப்பேரவை தோ்தலில் குளச்சல் பேரவைத் தொகுதியில் மாவட்டச் செயலா் அந்தோணிமுத்துவை மீண்டும் போட்டியிடச் செய்வது, வாக்காளா்களிடம் இருந்து தோ்தல் நிதியாக தலா ரூ. 1 பெறுவது , பிப். 6 ம் தேதி
திங்கள்நகரில் நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் பிகாா் மாநில சட்டப்பேரவை உறுப்பினா் திபங்கரை சிறப்பு அழைப்பாளராக அழைப்பது , மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டிப்பது, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

