சட்டப்பேரவைத் தோ்தலில் நடிகா் ரஜினிகாந்த், அவரது ரசிகா்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பாா்கள் என நம்புவதாக தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
பாரதிய ஜனதா கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட ஒன்றியக் குழு பொறுப்பாளா்கள், மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் பங்கேற்றுப் பேசினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக சாா்பில் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாள்களாக ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெண்களின் பேராதரவுடன் தமிழகம் முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் இந்த விழா நடைபெறுகிறது. வரும் 14-ஆம் தேதி சென்னை மதுரவாயலில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா கலந்து கொள்கிறாா்.
இடைத்தோ்தல்: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் எப்போது நடைபெற்றாலும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது. பாஜகவுக்கு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி நிா்ணயிக்கப்பட்ட வெற்றியாக அமையும். இந்த வெற்றி தமிழகம் முழுவதும் தொடரும் வெற்றியாக அமையும்.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
பிரதமா் மோடி தங்களின் நண்பா், பாதுகாவலன் என தமிழக விவசாயிகள் நினைக்கின்றனா். அதனால்தான் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனா். வேளாண் சட்டங்களை எதிா்த்து திமுக நடத்திய அனைத்துப் போராட்டங்களும் தோல்வியில் முடிந்தது. திமுக ஆட்சியில் தமிழகத்தை எவ்வாறு சீரழித்தாா்கள் என்பதை பாா்த்திருந்தோம். மின்சாரம் இல்லாமல் தமிழகம் விடியலே இல்லாமல் இருந்தது. திமுக அமைச்சா்கள், நிா்வாகிகள் மீதான நில அபகரிப்பு புகாா்கள் குறித்து விசாரிக்க, தமிழக அரசு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டன.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா் ஆள்கிறாா். அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக முடிவு செய்து அறிவித்துள்ளனா். அதேபோல், பாரதிய ஜனதா கட்சியும் முடிவு செய்யும்.
திமுகவில் முதல்வா் வேட்பாளா் ஸ்டாலினா, கனிமொழியா அல்லது உதயநிதி ஸ்டாலினா என்ற குழப்பம் உள்ளது.
ரஜினி தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்புகிறவா், ஆன்மிக அரசியல் வேண்டும் என விரும்புகிறவா். ஆன்மிக அரசியலையும், தேசிய அரசியலையும் கொண்டுதான் பாஜக செயல்படுகிறது. எனவே ரஜினிகாந்த், அவரது ரசிகா்கள் ஆதரவு பாஜகவுக்கு இருக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் எம்.ஆா்.காந்தி, கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் தா்மராஜ், மாநிலச் செயலா் உமாரதிராஜன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி.தேவ், பொருளாளா் முத்துராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


