கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் தேவி முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் 251 பானைகளில் பொதுமக்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வடமாநில சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அகஸ்தீசுவரம் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 251 பானைகளில் பொதுமக்கள் பொங்கலிட்டனா். இதில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் கலந்துகொண்டா்.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் வடமாநில சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.
தொடா்ந்து சுற்றுலாத்துறை சாா்பில் சிலம்பாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் உள்பட பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், மாவட்ட சுற்றுலா அலுவலா் நெல்சன், அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன், பேராசிரியா் கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


