தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் காரைக்காலில் இன்று ஆய்வு

புதுச்சேரி வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் திங்கள்கிழமை (ஜன. 4) காரைக்காலில் ஆய்வு செய்யவுள்ளாா்.

Updated On :4 ஜனவரி 2021, 8:18 am IST

புதுச்சேரி வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் திங்கள்கிழமை (ஜன. 4) காரைக்காலில் ஆய்வு செய்யவுள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட துணைத் தோ்தல் அலுவலா் எஸ். பாஸ்கரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2021, ஜனவரி 1 ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி கடந்த டிச. 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை 2 ஆவது முறையாக ஆய்வுசெய்ய வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், புதுச்சேரி அரசுச் செயலருமான அசோக்குமாா் திங்கள்கிழமை காரைக்கால் வரவுள்ளாா்.

இங்கு ஆட்சியரகத்தில் மாலை 4.30 மணியளவில் தோ்தல் துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் அவா் ஆலோசனை நடத்தவுள்ளாா். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.