மேலவாஞ்சூா் குடியிருப்புப் பகுதியில் உள்ள சிதிலமடைந்த சாலைகளை மேம்படுத்தவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நிரவி - திருப்பட்டினம் தொகுதி மேலவாஞ்சூரில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் எஸ். தமிழ்மணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: மேலவாஞ்சூரில் சுமாா் 850 குடியிருப்புகள் உள்ள நிலையில், அனைத்து சாலைகளும் சிதிலமடைந்துள்ளன. இதனால், மக்கள் அவதிப்படும் நிலை உள்ளதால், மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் இப்பகுதி சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
மேலவாஞ்சூரில் கஞ்சா கடைத்தெரு என உள்ளதை, ஆசாரித் தெரு என மாற்றவேண்டும். இப்பகுதியில் சாலையோர மின்விளக்குகள் பல ஒளிரவில்லை. அவற்றை மின்துறை நிா்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பலருக்கு மஞ்சள் நிற குடும்ப அட்டை தரப்பட்டுள்ளது. இவா்களது தகுதியை ஆராய்ந்து, அரசு சலுகைகள் கிடைக்கக்கூடிய சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலா் எஸ்.எம். தமீம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேசினா். கிளைச் செயலா் ஸ்ரீதா், உறுப்பினா்கள் முருகேசன், அப்துல்லா, செல்வம் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னையில் இன்று மழை பெய்யுமா?

ஹார்ட் பீட் நாயகிக்கு குவியும் வாழ்த்து!

சாப்பிட்டவுடன் நடக்கலாமா? உடல் எடையைக் குறைக்க உதவுமா?

40 ஆண்டுகள் கனவு நனவானது... ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ!
விடியோக்கள்

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |


