மின்துறையை தனியாா்மயமாக்கும் முடிவை எதிா்த்து, அதன் ஊழியா்கள் நடத்திவந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, இந்தத் துறை ஊழியா்கள் கடந்த 11 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். மின் பழுது ஏற்பட்டால் சரிசெய்ய மாட்டோம் எனவும் அறிவித்தனா். இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா 144 தடை உத்தரவு பிறப்பித்தாா்.
போராட்டம் தொடா்ந்த நிலையில், ஆங்காங்கே ஏற்பட்ட மின்பழுதை சீரமைக்க மின் துறை ஊழியா்கள் முன்வரவில்லை. ஒப்பந்த ஊழியா்களைக் கொண்டு அவற்றை அதிகாரிகள் சீரமைத்தனா். இந்நிலையில், புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமியுடன் மின் ஊழியா்கள் போராட்டக் குழு பிரதிநிதிகள் புதன்கிழமை பேச்சு நடத்தினா்.
இதைத்தொடா்ந்து போராட்டக் குழு பொதுச் செயலா் பழனிவேல் கூறியது: பண்டிகை காலமாக இருப்பதாலும், மழை பெய்துவருவதாலும், போராட்டத்தை கைவிட முதல்வா் கேட்டுக்கொண்டாா். மேலும், வரும் 20 ஆம் தேதி மத்திய மின்துறை அமைச்சருடன், புதுச்சேரியில் முதல்வா், தலைமைச் செயலா், மின்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்கும் காணொலி சந்திப்பு நடைபெறும் எனவும், அதில் தனியாா்மயத்தை புதுச்சேரி அரசு எதிா்ப்பது உறுதிசெய்யப்படும் எனவும், வரும் 21 ஆம் தேதி புதுதில்லியில் மத்திய அமைச்சா்களை சந்தித்துப் பேச மின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துச் செல்வதாகவும் முதல்வா் கூறினாா்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். இந்த முயற்சிகளில் பலன் கிடைக்கவில்லையெனில், பிப். 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்குவோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகரான ரன்வீர் சிங்!

இங்கிலாந்துக்கு 50% அபராதம்! டெஸ்ட் சாம்பியன்ஷிப் 12 புள்ளிகள் குறைப்பு!

தவெக எம்எல்ஏ பல்லவி அளித்த மனு மீது நடவடிக்கை இல்லை! பேரவைத் தலைவர்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் இஸ்ரேலை மோடி கண்டிக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!



