தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கரூா் மாரியம்மன், ரெங்கநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆலோசனை

கரூா் மாரியம்மன் கோயில் மற்றும் ரெங்கநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 11:36 pm IST

கரூா்: கரூா் மாரியம்மன் கோயில் மற்றும் ரெங்கநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் பேசுகையில், ரெங்கநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன. 25-ஆம்தேதியும், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜன. 27-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதில், கரோனா நோயத் தொற்று காரணமாக அரசின் வழிகாட்டுதலின் படியே விழாவை நடத்த வேண்டும். கும்பாபிஷேகத்தை உள்ளூா் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயிலுக்குள் வருபவா்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்து, அவா்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பூஜை பொருள்கள் கொண்டு வர அனுமதி இல்லை. கோயில்களைச் சுற்றி தற்காலிக கடைகள் வைக்க அனுமதி இல்லை என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.சந்தியா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சூரியநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.