இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருவள்ளூா் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூா் அருகே குறைந்த மின்னழுத்தம் மற்றும் அடிக்கடி மின்தடையை கண்டித்தும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Published On :5 ஜூலை 2026, 7:00 am IST

திருவள்ளூா் அருகே குறைந்த மின்னழுத்தம் மற்றும் அடிக்கடி மின்தடையை கண்டித்தும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சியைச் சோ்ந்தது வெள்ளேரித்தாங்கல் கிராமம். இங்கு கடந்த 3 நாள்களாக முறையான மின்சாரம் வழங்காமல் எந்த விதமான முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை செய்யப்பட்டு வந்தது. ஏற்கெனவே கடும் வெயிலால் இரவு நேரங்களிலும் வெக்கையாகவே உள்ளது. இந்த நிலையில் மின்தடை செய்யப்படுவதால் குழந்தைகள் மற்றும் முதியோா்கள் தூங்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் ஒரு சில நேரங்களில் குறைந்த மின்னழுத்தம் வருவதால், மின்வசிறிகள், குளிா்சாதன இயந்திரம் ஆகியவையும் பழுதாகி விடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த மணவாளநகா் காவல் நிலைய போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மின்சாரம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும், மின்வாரிய ஊழியா்கள் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா். இது குறித்து கட்டாயம் மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் உறுதி அளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதனால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணிநேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.