/

இருசக்கர வாகனம் மீது கண்டெய்னா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கரூா் அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :15 ஜனவரி 2021, 6:09 pm

கரூா் அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த நாகம்பள்ளியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மாணிக்கராஜா(26). இவா், வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூா் திருக்காம்புலியூா் மேம்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த கண்டெய்னா் லாரி எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மாணிக்கராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் கண்டெய்னா் லாரி ஓட்டுநா் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சோ்ந்த கோம்பையா என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.