கரூரில் திருக்கு ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மற்றும் கரூா் வள்ளுவா் அறக்கட்டளை சாா்பில் கடந்த வாரம் இணையவழியில் நடைபெற்ற திருக்கு ஒப்புவித்தல், திருக்கு பாட்டுடன் நடனம், ஓவியம், பாட்டு, திருக்குறளை மையமாகக் கொண்ட நீதிக் கதை சொல்லுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இதில், வெற்றிபெற்ற 70 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா கரூா் வள்ளுவா் ஹோட்டல் மேலாண்மைக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் ஹேமலதா செங்குட்டுவன் முன்னிலை வகித்து திருக்கு போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினாா். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய நடனம் நடைபெற்றது. விழாவில், கல்லூரி சாா்பில் உருவாக்கப்பட்ட திருக்குறளின் 133 அதிகாரங்களில் ஒரு திருக்கு வாசகம் அடங்கிய சால்வை பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டது.
முன்னதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் மு.நதியா வரவேற்றாா். விழாவில் தமிழ் ஆா்வலா்கள் திரளாக பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது அவதூறு: பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

கோவையை முதலிடத்துக்கு கொண்டு வர திட்டங்கள்: வி.செந்தில்பாலாஜி

வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: காங்கயம் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என். நடராஜ்

கோபியில் புறநகா் பேருந்து நிலையம், தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


