தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

நீதிக் கதைகள்! முன்னெச்சரிக்கை!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 4:32 pm IST

ஒரு கிராமத்து வீட்டில் எலி, சேவல், ஆடு மூன்றும் இருந்தன. ஒருநாள் அந்த வீட்டில் எலிப்பொறி வைக்கப்பட்டிருந்ததை எலி கண்டது. "இந்த வீட்டில் எலிப்பொறி இருக்கிறது. அதில் யாரும் மாட்டிக் கொள்ளாதீர்கள்' என்று சேவலிடமும், ஆட்டிடமும் சொன்னது.

அதற்கு சேவல், "எலிப்பொறி உனக்குத் தொடர்புடைய விஷயம். நான் ஏன் கவலைப்பட வேண்டும்?' என்றது. ஆடும், "எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீ மட்டும் அகப்படாமல் பார்த்துக் கொள்' என்றது.

அன்றிரவு எலிப்பொறியில் ஏதோ அகப்பட்ட சத்தம் கேட்டவுடன், அந்த வீட்டுப் பெண் இருட்டில் அந்தப் பொறியில் கை வைத்தார். பொறியில் மாட்டியது பாம்பாக இருந்ததால் அது அவரைக் கடித்துவிட்டது. மருத்துவரைக் கொண்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றிவிட்டனர்.

அந்தக் கிராமத்து வழக்கப்படி அந்தப் பெண் உடல்நிலை தேறுவதற்கு அந்தச் சேவலைக் கொன்று அதன் சாறு கொடுக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண்ணைப் பார்க்க வந்த உறவினர்களுக்கு அந்த ஆடும் விருந்தானது.

விபரீதங்களைப் புரிந்து கொள்பவர்கள் தனக்கென வைக்கப்பட்ட பொறிகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். எச்சரிக்கை விடுத்தும் அலட்சியப்படுத்துபவர்கள் அவதிப்படுகிறார்கள். முன்னெச்சரிக்கையுடன் நடப்பவர்களுக்கு எந்தவிதமான தீங்குகளும் ஏற்படாது. "நமக்கு வராது' என்ற அலட்சியப் போக்கை விட்டொழித்து, நம்மைச் சுற்றி நடப்பது நமக்கும் எற்படலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும்.

(முனைவர் இரா.திருநாவுக்கரசின் "கரோனாவும் பொறுப்புணர்வும்' கட்டுரையிலிருந்து...)

தொகுப்பு : எம்.ஜி.விஜயலெக்ஷ்மி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.