சிரி... சிரி...

எதுக்கு தொலைக்காட்சியில் வால்யூமை அதிகம் வைக்கிறே?
சிரி... சிரி...
Updated on
1 min read

எதுக்கு தொலைக்காட்சியில் வால்யூமை அதிகம் வைக்கிறே?

'வில்லன் காதில் அவன் நண்பன் ஏதோ ரகசிய கட்டளை பிறப்பிக்கிறான். அது என்னன்னு தெரிஞ்சுக்கத்தான்!'

-ரத்னம் மரகதம், கோயமுத்தூர்.



'ஏண்டா! எக்ஸாமுக்கு நைட் ஃபுல்லா படிச்சேன்னு சொன்னே.... ஆனா ரூமில் லைட் எரியவில்லையே?'

'படிக்கிற ஆர்வத்தில் அதை மறந்து விட்டேன்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'ஜோசியருக்குப் பிடிச்ச சட்டை எது தெரியாமா?'

'தெரியாதே?'

'கட்டம் போட்ட சட்டைதான்!'

-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.



'வலி தெரியாமல் டாக்டர் ஊசி போடுவார். ஆனால்...'

'வேற என்ன செய்வார்?'

'நெஞ்சு வலிக்கிற மாதிரி ஃபீஸ் வாங்குவார்!'



'ரிட்டையர்டு லைஃப் எப்படிப் போகுது?'

'முன்பு பகுதி நேரமா பார்த்த வேலையை இப்ப முழுசா செய்யறேன்!'



'இந்த வருஷமாவது நல்லா படித்து பாஸ் பண்ற வழியைப் பாருடா!'

'நீங்களும் எனக்குப் புரியற மாதிரி இந்த வருஷமாவது சொல்லிக்கொடுங்க!'

-நா.குழந்தைவேலு, மதுரை.



'இன்னும் சமையல் ஆகலை... போப்பா!'

'ஏம்மா! நம்ம அய்யா இவ்வளவு சோம்பேறீயா ஆகிட்டாரு?'



'ஏன்யா... குடிச்சுட்டு வண்டி ஓட்டிக்கிட்டு வர்றே?'

'குடிக்கலைன்னா எனக்கு எதுவும் ஓடாது, சார்!'



'உங்க ஆபிசுக்கு எதுக்கு டாக்டர் வந்திருக்காரு?'

'யாருக்காவது தூக்கத்துல நடக்கிற வியாதி இருக்கான்னு செக் பண்ண வந்திருக்காரு!'



'என்னோட பிள்ளைங்கதான் என்னோட சொத்து!'

'வெளியே சொல்லாதீங்க... வரி போட்டுடப் போறாங்க!'

-தீபிகா சாரதி, சென்னை -5.



'இந்த டாக்டர்கிட்ட பேஷண்ட்ஸ் யாரும் வரமாட்டாங்கன்னு எப்படிச் சொல்றே?'

'அவரோட பிரிஸ்கிரிப்ஷன் லெட்டர் பேடுல பத்திரிகைகளுக்கு ஜோக்ஸ் எழுதி அனுப்பறாரே!'



'குழந்தைக்கு 'பாக்கியம்'னு பேர் வைக்க என்ன காரணம்?'

'எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடையாதுன்னு சோதிடர் சொன்ன பிறகு பிறந்ததால, அந்தப் பேரை வச்சிட்டோம்!'



'பேப்பர் ரோஸ்ட்டை எப்படி சார் உங்களால கம்மி விலைக்குத் தர முடியுது?'

'விளம்பரங்கள் வர்றதால சமாளிக்கிறோம், சார்!'



'புறா, மன்னரின் தலையில் கொத்தி விட்டது வைத்தியரே..!'

'ஏன் அப்படிச் செய்தது?'

'போர் ஓலையை வாங்காமல் மன்னர் டிமிக்கி கொடுத்ததில், புறா கடுப்பாகி விட்டது வைத்தியரே!'



'எதிரியிடமிருந்து குங்குமம் தடவப்பட்ட ஓலை வந்திருக்கிறது மன்னா. சுபச் செய்தியாகத்தான் இருக்கும் மன்னா...!'

'தடவப்பட்டது குங்குமம் தானா அல்லது, ரத்தமா என்பதை பாருங்கள் அமைச்சரே...!'

-வி.ரேவதி, தஞ்சை.



'ஏன்டா, புத்தகத்தை எடுத்தவுடன் தூங்குறே?'

'நீங்கதானே படிப்பு எனக்கு ஒரு கனவுன்னு சொன்னீங்க!'



'என்னங்க... நேத்து ஒரு பொண்ணுகூட சினிமாவுக்குப் போனீங்களாமே?'

'ஆமா... இப்ப வர்ற படங்கள் எல்லாம் குடும்பத்தோடு பார்க்கிற மாதிரியா இருக்கு?!'

-ராஜேஸ்வரி, கல்லிடைக்குறிச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com