நிலவு என்பது மனித வாழ்வோடு இணைந்த கோளாகும். பூமியில் இருந்து தெளிவாகக் காணக்கூடிய நிலவைக் காட்டி, பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு உணவை ஊட்டுவர். முழு நிலாக் காலத்தில் மொட்டை மாடியில் இருந்து, ' நிலாச்சோறு' உண்ட நாள்கள் பல மனிதர்களால் வாழ்வில் மறக்க முடியாதவையாகும்.
அமெரிக்கா நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலத்தின் தளபதி நீல் ஆம்ஸ்ட்ராங், முதன் முதலில் 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-இல் நிலவில் கால் பதித்தார். இதனால், அன்றைய தினத்தை 'நிலவு தினம்' என்று கொண்டாடுகின்றனர்.
நிலவில் கடைசியாக நடந்தவர் யூஜின் செர்னான். அமெரிக்காவின் அப்பல்லோ 17 விண்கலத்தின் தளபதியான இவர், 1972-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிலவுக்குச் சென்று காலடி வைத்தார்.
1990-க்குப் பின்னர் ஜப்பான், சீனா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிலவைக் குறித்து ஆராய்ச்சி செய்ய விண்கலங்களைச் செலுத்தி வெற்றி பெற்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 22-இல் சந்திரயான்-1-ஐ விண்ணில் செலுத்தி, நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்தனர்.
2023-ஆம் ஆண்டு ஜூலை 14-இல் ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து எல்விஎம் 3-எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்- 3 ஏவப்பட்டது.
2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-அன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்கியது. இந்தத் திட்டம் நிலவின் தென் துருவத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய உதவியது. இதனால் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. நிலவின் பல புதிர்களை ஆராயும் முயற்சிகளில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்கா என்ற நிலப்பரப்பு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்து, ஸ்பெயின், பிரெஞ்சு ஆகிய நாடுகள் அங்குச் சென்று தங்கள் காலனிகளை அமைத்தன. இப்போது நிலாவிலும் தங்களுக்கான பகுதியை வரையறுக்க சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முனைகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாதனைகளின் மகுடம் 'சந்திரயான்-3'
தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மீண்டும் திட்டவட்டம்

ஜூலை 24 இல் ஒசூா் புத்தகத் திருவிழா

இடைச்சிவிளையில் ஜூலை 10இல் நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


