யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

நீதிக் கதைகள்! பயம்தான் பேராசைக்குக் காரணம்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

Published On :

அந்தக் குரு தன் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது குரு சீடர்களிடம், 'பயம்தான் பேராசைக்குக் காரணம்!' என்று போதித்தார்.

சீடர்களுக்கு குரு சொன்னது விளங்கவில்லை.

பயம் என்பது வேறு, பேராசை என்பது வேறு. பயத்திற்கும் பேராசைக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்? என்று குழம்பினார்கள்.

தங்கள் சந்தேகத்தை குருவிடமே கேட்கவும் செய்தார்கள். குரு புன்னகைத்தபடி, 'இக்கேள்விக்கான பதிலை உங்களுக்கு நாளை சொல்கிறேன்!' என்று சொல்லிவிட்டார்.

இரவு உணவு நேரம்.

குருவும் சீடர்களும் சாப்பிட அமர்ந்தனர். அப்போது ஆசிரமத்தின் சமையற்காரர் அங்கு வந்தார்.

அவர் குருவிடம், 'சுவாமி! நம் கைவசம் இருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. நாளை காலை யாருக்கும் உணவு இருக்காது போலிருக்கிறது. வெளியூர் சென்று பொருள்கள் வாங்கி வர எப்படியும் நண்பகல் ஆகிவிடும்'' என்று சொன்னார்.

சமையற்காரர் சொன்னதை அமைதியாகக் கேட்டுவிட்டு ஜாடையால் பதில் சொல்லி அனுப்பினார். எல்லோரும் அமைதியாக உணவு உண்டு முடித்தனர். சீடர்கள் அனைவரும் உண்டு முடித்ததும் குரு அவர்களிடம் 'நீங்கள் வழக்கமாக உண்பதைவிட இப்போது சற்று அதிகம் உணவு உட்கொண்டீர்களா?' என்று கேட்டார்.

சீடர்களால் குருவிடம் உண்மையை மறைக்க முடியாதே! அனைவரும் 'ஆமாம்!' என்றனர்.

குரு கேட்டார் 'நாளை இரவுதான் இனி அடுத்த வேளை உணவு உண்ண முடியும் என்று தெரிந்தவுடன் நீங்கள் அனைவரும் வழக்கத்தைவிட அதிகமாக உணவு உட்கொண்டீர்கள். நாளை இரவுவரை பசியைத் தாங்க முடியுமா, முடியாதா என்ற பயம்தான் இப்போது நீங்கள் அதிகம் உண்டதன் காரணம். ஆக பயம்தான் பேராசைக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

சீடர்களும் குருவின் விளக்கத்தை ஒப்புக்கொண்டனர்.

Summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.