ஒரு மன்னனின் அரசவையில் விதூஷகன் ஒருவன் நேரத்துக்கேற்றவாறு பேசுவதில் வல்லவனாக இருந்தான்.
மன்னன் ஒரு நாள் விதூஷகனிடம் உள்ளங்கையைக் காட்டி என் உள்ளங்கையில் ஏன் ரோமம் இல்லை? எனக் கேட்டான்.
அதற்கு விதூஷகன் சாதுர்யமாக "மன்னா அடுத்தவர்க்கு கொடுத்துக் கொடுத்து உங்கள் கைகளில் ரோமம் வளரவில்லை'' என்றான்
அதற்கு மன்னர், "நாட்டு மக்களின் கைகளில் கூட ரோமமில்லையே ஏன்?'' என்றார்.
விதூஷகன் உடனே, "நீங்கள் வாரி வாரி வழங்கும் போது அதை வாங்கி வாங்கி அவர்களுக்கு ரோமம் வளரவில்லை'' என்றான்.
விதூஷகனை மடக்க மன்னன் "அதெல்லாம் சரி, நம் நாட்டு எதிரிகளின் உள்ளங்கைகளிலும் கூட ரோமம் இல்லையே ஏன்? '' எனக் கேட்டு திணறச் செய்தார்.
விதூஷகன் சற்று யோசித்து மன்னா, "உங்களின் வீரம், திறமை, ஆற்றல் இதனையெல்லாம் கண்டு செய்வதறியாது. கைகளைப் பிசைகின்றனர். அதனால் தான் அவர்களின் கைகளிலும் ரோமமில்லை'' என்றதும் விதூஷகனின் நுண்ணறிவைப் பாராட்டினார் மன்னன்
Summary
A moral story that children should know.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









