திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

சிரி... சிரி...

சர்வர்... பில்லுல ஏன் புதுசா சர்வீஸ் சார்ஜ் போட்டிருக்கீங்க?

News image
Updated On :21 ஜூன் 2026, 4:18 am IST

'சர்வர்... பில்லுல ஏன் புதுசா சர்வீஸ் சார்ஜ் போட்டிருக்கீங்க?'

'பத்து முறை சட்னி, சாம்பார் வாங்கினீங்களே... அதுக்காகத்தான்!'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.



'ராத்திரி அந்தப் பெண்ணோட பின்னாடி போய் செயினை பறிச்சுட்டு ஏன் விட்டுட்டு வந்துட்டே?'

'முன்னாடி பார்த்தப்பதான் அவ என் மனைவின்னு தெரிஞ்சுது!'

-எம்.பி.தினேஷ், கோவை.

'அந்த ஹோட்டலில் இட்லி தண்ணியா இருக்கே?'

'லிக்விட் இட்லியாம்!'



'மன்னருக்கு காயம் ஏற்பட்டு விட்டதா, எப்படி?'

'மன்னருக்கு சாமரம் வீசச் சொன்னால் சாமரத்தையே வீசிவிட்டதாம் அந்தப் பெண்!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.

'டைரக்டர் சார்... இப்போ எதுக்கு அண்டாவைத் தர்றீங்க?'

'நீதானேம்மா படத்துல பெரிய பாத்திரமா கேட்டீங்க!'



'சர்வர்... இது காபியா? டீயா?'

'சும்மா சாப்பிடுங்க சார்... பேரை அப்புறம் வெச்சிக்கலாம்!'



'பெட்ரோல் விலை உயர்ந்ததும் ஒருவிதத்தில் நல்லதுதான்!'

'என்ன தலைவரே சொல்றீங்க?'

' இனி ஒரு பயலும் என் கொடும்பாவியை எரிக்க மாட்டானுங்களே!'



'டாக்டர் ரூமில் குழந்தை ஏன் கத்துனான்... ஊசி போட்டாரா?'

'குழந்தை கையில் இருந்த சாக்லெட்டை பிடுங்குனாராம்!'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

'ஆபிஸ்ல உங்களை எல்லாரும் 'எஸ்சார்'னு ஏன் சொல்றாங்க?'

'என் பெயர் எஸ். சாரங்கன்!'



'கால் கிலோ மிக்சர்ல இருபது கிராம் கம்மியா இருக்கே?'

'எடை போடும் போதே கை நீட்டி வாங்கிச் சாப்பிட்டா குறையாதா?'



'பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...'

'குக்கர் சோற்றுக்கு?'

'மூணு சத்தம் பதம்.'



'பாதி வம்பில் ஏன் கோபமா கிளம்பிட்டா?'

'நான் சரியா ஊம் கொட்டிக் கேட்கலயாம்!'



'உடனே பதில் சொல்லமுடியுமா... முடியாதா?'

'உடனே முடியாது. ஏன் முடியாது என்பதையும் லேட்டாதான் சொல்ல முடியும்!'



'உங்க வீட்ல புதையல் இருக்குன்னு என் தாத்தா கனவில் வந்து சொன்னார்.'

'மறுபடியும் வந்தால் அதில் என்ன இருக்குன்னு கேட்டுச் சொல்லு...'

- பர்வதவர்த்தினி, பம்மல்.



'சாமியார் ஏன் ரொம்ப நேரமா மீசை, தாடியை தடவிக் கிட்டே இருக்காரு?'

'நல்லா ஒட்டியிருக்கான்னு செக் பண்றாரோ என்னவோ!'



'உங்க கடையில முந்தில்லாம் இட்லி பஞ்சு மாதிரி இருக்குமே... இப்பெல்லாம் ஏன் கடினமா இருக்கு?'

'பஞ்சு மாதிரி இருந்தா சாம்பார்ல முக்கினதும் எல்லா சாம்பாரையும் உறிஞ்சிடுது, சார்!'



'அரசியல்வாதியோட பையன்னு இவன் நிரூபிச்சிட்டான்...'

'எப்படி சார்?'

'ஒரு புதுமொழி சொல்லுடான்னு கேட்டா, 'பதவி உள்ளபோதே தேற்றிக் கொள்!'னு சொல்றான்!'

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.