எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிரி... சிரி...

'செகண்ட் ஹாண்ட்ல வாங்கின காரால் காலம் தள்ளிட்டு இருக்கேன்...'

News image
Updated On :7 மார்ச் 2026, 10:42 pm

இணையதளச் செய்திப் பிரிவு

'செகண்ட் ஹாண்ட்ல வாங்கின காரால் காலம் தள்ளிட்டு இருக்கேன்...'

'காலம் தள்ளிட்டு இருக்கீயா... காரைத் தள்ளிட்டு இருக்கீயா?'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.



'வகுப்பில் அமைதி நிலவியது. இது எந்தக் காலம்?'

'நீங்க தூங்குற காலம், சார்!'

-முகமது ஆதில், சென்னை.



'குழந்தை நல்லா பேசுதே... பிறகு ஏன் பேசறதில்லைனு கூட்டிக்கிட்டு வந்தீங்க?'

'டாக்டர்! பேசுறது குழந்தை இல்லை... அவன் முழுங்கின செல்போனில் இருந்து சத்தம் வருது !'



'மேக்கப் இல்லாம ஹீரோயினை முதியோர் இல்லத்துக்கு அழைத்தது தப்பாப் போச்சா, ஏன் ?'

'புதிய முதியவர்களுக்கு அட்மிஷன் கிடையாதுன்னு திருப்பி அனுப்பிட்டாங்க !'

-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.



'ரெண்டு கண்டம் பேர் சொல்லு?'

'சார்... எனக்கு மேத்ஸ், சயின்ஸ் ரெண்டும்தான் கண்டம்!'

-வி.எஸ்.மங்கை, நங்கநல்லூர்.



'போன முறை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது என்று சிகிச்சை எடுத்துக் கொண்டீர்களே... இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?'

'டாக்டர்... இப்ப கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்குது..!'



'மனு நீதி சோழனிடம் மாடு என்ன மகஜர் கொடுத்தது?'

'ஆராய்ச்சி மணி அடித்தால் சப்தம் சரியாக வரவில்லை என்று..!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'யாரங்கே?'

'சம்பளம் எங்கே, மன்னா?'

'சரி வேண்டாம், வராதே!'



'வீட்டு லோன் வாங்கிட்டு ஏன் கட்டலை?'

'சரியான பில்டர் கிடைக்கல, சார்!'



'இந்த ஆபீஸ்ல இவர் ஒருத்தர் தான் லஞ்சம் வாங்கறதில்ல!'

'அதான், கையை நீட்டாம மடக்கி வச்சிட்டு உக்காந்திருக்காரா?'

-பர்வின் யூனுஸ், சென்னை.



'உண்மைத் தொண்டன்னா இவன் தான்யா..!'

'எதை வச்சு தலைவா இப்படிச் சொல்றீங்க?'

'நான் சரக்கு அடிச்சதுக்கு, இவன் வாந்தி எடுக்கிறானே!



'ஹார்டு டிஸ்க் இல்லாத கம்ப்யூட்டரா வாங்கணும்யா..!'

'என்ன தலைவா சொல்றீங்க?'

'இ.டி, ஐ.டி.காரங்கதான் ஹார்டு டிஸ்க்லேர்ந்து எல்லா விஷயத்தையும் எடுத்துடறாங்களாமே!'



'ஆபரேஷன் முடிந்து தையல் போடுறதுக்கு முந்தி ஒரு தடவை மானிட்டர்ல பார்த்துடுவோம்..!'

'எல்லாம் சரியா இருக்கான்னா டாக்டர்?'

'இல்ல... கத்தி, கத்திரி, கிளவுஸ் ஏதையாவது உள்ளே வச்சிருக்கோமான்னு.!'

-வி.ரேவதி, தஞ்சை.



'கூட்டணி காய் ஒரு கிலோ போடு...'

'அப்படின்னா..?'

'எல்லா காயும் கலந்து...'



'விடை சரியில்லையே..?'

'பார்த்து எழுதிய பிட்ல ஏதோ கோளாறா இருக்கும், சார்!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.