
நதிக்கு நமது நன்றி
எங்கள் ஊரில் ஆறு ஒன்று அழகாய் நீண்டு போகுது! -நுரை
எங்கள் ஊரில் ஆறு ஒன்று
அழகாய் நீண்டு போகுது! -நுரை
பொங்கி ஓடும் அந்த ஆறே
பொன்னி என்னும் காவிரி!
-
பொன்னி நதியின் பெருமை பற்றி
பெற்றோர் எனக்குச் சொல்வரே!- அதை
எண்ணி எண்ணி எனது மனமும்
உவகை தினமும் கொள்ளுதே!
-
பொன்னி ஓடும் பாதையி லெல்லாம்
பசுமை வயல்கள் பலவே!- அவை
பொன்னி நீரால் செழுமை நிறைந்து
பலபல தானியம் தந்திடுலாமே!
-
ஆற்றங் கரையில் ஆலயம் பலவும்
அழகாய்க் காட்சி அளிக்குதே!- நானும்
பெற்றோர் கூடப் போகும் போது
பார்த்து மகிழ்ந்து போவேனே!
-
புனித நாளில் பலரும் இங்கே
படைகள் போல வருகிறார்!- இந்த
இனிய நதியில் இறங்கிக் குளித்தே
இல்லம் மகிழ்வாய்த் திரும்புகிறார்!
-
நல்ல நெல்லை நமக்கு குவிக்கும்
நதிக்குச் செல்வோம்- நன்றியே! இதில்
நச்சு கலந்த நீரை விடுதல்
நன்றோ நீங்கள் சொல்வீரே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







