சிரி... சிரி... | 18-10-2026
வாஸ்துப் படி கிச்சன் எங்கே இருக்கணும்?
'வாஸ்துப் படி கிச்சன் எங்கே இருக்கணும்?'
'என்னோட கண்ல படாம இருக்கணும், அத்தை!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
-------------------------------------------------------------------------------------------
'அந்த டாக்டர், போலின்னு எதை வச்சி சொல்றே?'
'கால்ல ஆணி இருக்குன்னு சொன்னா, கட்டிங் பிளேயரை எடுத்து 'காலைக் காட்டுங்க'ன்னு சொல்றாரே!'
- க. பூமலை, நமசிவாயபுரம்.
-------------------------------------------------------------------------------------------
'ரன்னிங் ரேஸ் நடக்குற இடத்துல மைக்செட் காரருக்கு என்ன வேலை?'
'ஒன் டூ த்ரீ சொல்வாராம்!'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
-------------------------------------------------------------------------------------------
'அந்த ஹோட்டலில் எது காரசாரமா இருக்கும்?'
'மிளகாய்ப் பொடி மட்டும்தான்... டிபன் சப்பென்று இருக்கும்!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
-------------------------------------------------------------------------------------------
'மரணத்துக்குப் பின்பும் வாழ்க்கை இருக்கா?'
'ஏன் சார் இப்படிக் கேக்குறீங்க?'
'நேத்து உங்க சித்தப்பா இறந்துட்டாருன்னு லீவு கேட்டீங்க... இன்னைக்கு உங்க சித்தப்பா உன்னைப் பார்க்க இந்த ஆபீசுக்கு வந்தார்!'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
-------------------------------------------------------------------------------------------
'இன்னைக்கு நைட்டு நான் வர லேட்
ஆகும்மா...'
'அப்ப டின்னர்?'
'ஆபீஸ்லயே சாப்பிட்டுக்குவேன்மா...!'
'நான், என்னோட டின்னரைப் பற்றி கேட்டேன்ங்க!'
-------------------------------------------------------------------------------------------
'எங்க பால்காரர் கிணத்துல விழுந்து செத்துட்டாராம்...'
'எதுக்கு கிணத்துல விழுந்து சாகணும்?'
'பாலுக்கு ஊத்த தண்ணி பிடிக்க கிணத்துல இறங்கினப்ப தவறி விழுந்துட்டாராம்!'
-வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.